புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மனிதப் பெண் ஒருவருக்கு பிள்ளையாக பாம்பு பிறந்து உள்ளது என்று ஒரு கிராமம் முழுவதுமே முழுமையாக நம்புகின்றது. இது நடப்பது வெளிநாட்டில் அல்ல. நம் நாட்டில்தான்.


கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் உள்ளது கடுக்கன் என்கிற தனித் தமிழ் கிராமம். இங்கு அனைவருமே இந்துக்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த பெண் முத்துலிங்கம் மோசிகசுந்தரி. 1966 ஆம் ஆண்டு பிறந்தவர். 46 வயது. 1983 ஆம் ஆண்டு 17 ஆவது வயதில் தகாயநாயகம் என்பவரை திருமணம் செய்தார். தகாயநாயகம் ஒரு கூலித் தொழிலாளி.

இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. முதல் இரண்டும் பெண் குழந்தை. மூன்றாவது ஆண். நான்காவது பாம்பு. ஐந்தாவது ஆண் குழந்தை.

1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு இப்பெண்ணுக்கு பாம்புக் குழந்தை பிறந்தது.

இங்கு வீடுகளில்தான் பிரசவங்கள் வந்திருக்கின்றன. மருத்துவிச்சிகள்தான் வந்து பிரசவம் மேற்கொண்டார்கள். வீட்டில் இருந்த வேப்ப மரத்தடியில் பிரசவம் நடந்தது. மருத்துவிச்சிகள், வீட்டுக்காரர்களுக்கு முன்பு ஒரு போதும் கேள்விப்பட்டு இராத, கண்டிராத அதிசயத்தை பார்க்க நேர்ந்தது.

இவர்தான் மோசிகசுந்தரி வீட்டில் பாம்பு தங்குகின்ற இடம்மூன்றாவது குழந்தைக்கும் பாம்புக் குழந்தைக்கும் இடையில் ஐந்து வயது வித்தியாசம். கருத் தரித்து ஒன்பதாவது மாதத்தில் பாம்பு பிறந்து இருக்கின்றது.

மதியம் 12.00 மணி அளவில் ஊர்ந்து போனது. பந்தாரியா வழி நாக தம்பிரான் ஆலயத்தை சென்றடைந்தது. கோயில் புற்றை வசிப்பிடம் ஆக்கியது.

பாம்பைப் பிள்ளையாக பெற்றமையால் சபிக்கப்பட்டவராக ஊர் மக்களில் ஒரு தொகையினரால் மோசிகசுந்தரி பார்க்கப்பட்டார். இவரை பழித்துப் பேசினார்கள்.

பாம்பு இவரின் வீட்டுக்கு அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தது. ஊரவர்களின் பழிச் சொற்களை தாங்க முடியாத இவர் நீ ஏன் என் வயிற்றில் வந்து பிறந்தாய்? எங்கேயாவது போய் விடு, இனி மேல் இங்கு வராதே என்று பாம்பை கடுமையாக திட்டி இருக்கின்றார்.

இதற்குப் பின் பாம்பு இவரது கண்களுக்கு படவே இல்லை. ஐந்து வருட காலம் இந்நிலை நீடித்தது. ஆனால் இந்த ஐந்து வருடங்களும் மோசிகசுந்தரியின் குடும்பத்துக்கு மிக மோசமான சோதனைக் காலமாக அமைந்தன.

ஐந்து வயது வித்தியாசம். கருத் தரித்து ஒன்பதாவது மாதத்தில் பாம்பு பிறந்து இருக்கின்றது. வீட்டில் பயங்கர வறுமை. பல சமயங்களில் ஒரு நேரச் சாப்பாடுதான்.

சோதனை தாங்க முடியாமல் ஒரு நாள் நாக தம்பிரான் ஆலயத்துக்கு சென்று அழுது, குழறி சாமியை கும்பிட்டு இருக்கின்றார்.

அன்றில் இருந்து பாம்பு இவர் வீட்டுக்கு மீண்டும் வர தொடங்கியது. இப்போது இவர்கள் கஷ்டங்கள் தீரப் பெற்று, மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இவரும், இவரது கணவரும் இப்பாம்பை தற்போது சொந்த பிள்ளையாகவே நடத்துகின்றார்கள்.



இவர்களின் மற்றப் பிள்ளைகளும் பாம்பை சகோதரர்களாகவே நடத்துகின்றனர். பாம்பு வந்து தங்குவதற்காக வீட்டுக் கோடியில் இடம் ஒன்றை ஒழுங்கு பண்ணிக் கொடுத்து உள்ளனர். பாம்பு குடிப்பதற்கு தண்ணீர் வைப்பார்.

பாம்புக்கு மோசிகசுந்தரியின் மன நிலையை புரிந்து நடக்கும். இவர் கோபமாக இருக்கின்றபோது அதன் பாட்டில் சென்று விடும்.

இவ்வளவு விபரங்களை சொல்லத் தொடங்கியபோதே உணர்ச்சி வசப்பட்டு குழறத் தொடங்கினார் மோசிகசுந்தரி.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top